மர்ம கும்பலால் தம்பதிக்கு நடுரோட்டில் அடி, உதை: நடந்தது என்ன?

Report Print Aravinth in இந்தியா

நாகை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் தம்பதியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த மருதங்குடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிராண்சிஸ்(30). இவர் தவணை முறையில் பணம் செலுத்தி ஒரு இருசக்கர வாகனத்தினை வாங்கியுள்ளார். கூலித் தொழிலாளியான இவரால் தவணை சரியாக கட்ட முடியவில்லை.

இந்நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் தவணை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பிராண்சிஸ் தனது மனைவி பூங்கொடியுடன் (25) நேற்றுமுன்தினம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் உறவினர் வீட்டு வளைகாப்பு விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது நிதி நிறுவன ஊழியர்கள் வழி மறித்து பிராண்சிஸை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும், பூங்கொடியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க கம்மலையும் பறித்துள்ளனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்து, பூங்கொடி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நிதி நிறுவன ஊழியர்களை தாக்கியதற்காக புளிச்சக்காடு பகுதியைச் சேர்ந்த இளமதி(36) மற்றும் பிராண்சிஸ் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments