அமைச்சருடன் ஆபாச காட்சியில் தோன்றிய பெண் பரபரப்பு புகார்!

Report Print Santhan in இந்தியா

தமக்கு வேலை வாங்கி தருவதாக உள்ளிட்ட ஆசை வார்த்தை கூறியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தம்முடன் உறவில் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் குழந்தைகள் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக செயலாற்றி வந்தவர் சந்தீப்குமார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தீப்குமார் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் சந்தீப் குமாரோ அதில் இருப்பது தான் இல்லை என மறுத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து அந்த சீடியில் அவருடன் இருந்த பெண் பொலிசில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில் , சம்பவதினத்தன்று சந்தீப்குமார் தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார். இதனால் பார்க்க சென்ற எனக்கு அவர் ஒரு பானம் கொடுத்தார். அதை குடித்த பின்பு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆனால் அன்று நடந்த அனைத்தையும் அவர் வீடியோ எடுத்து மிரட்டினார். மேலும் தன்னையும் தன் குழந்தைகளையும் பார்த்து கொள்கிறேன் எனவும் , தனக்கு வேலை தருவதாகவும் மற்றும் கூடுதலாக ரேஷன் கார்டு வாங்கி தருவதாகவும் கூறினார்.

தான் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால், தன்னால் இந்த வழக்கில் ஈடுகொடுக்க முடியாது. தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளதால், இந்த சமூகம் தன்னை இழிவாக பார்க்கும் என தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் 11 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.

இதனால் பொலிசார் சந்தீப்குமார் மீது பல்வேறு வழக்குகளில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments