தேநீர் விடுதியில் பணிபுரியும் பதக்கங்கள் குவித்த சாம்பியன்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல தேநீர் விடுதி ஒன்று இந்திய விளையாட்டு ரசிகர்களால் மறக்கடிக்கப்பட்ட சாம்பியன்கள் 7 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் அமைந்துள்ளது 105 ஆண்டுகள் பழமையான La Gravitea தேநீர் விடுதி.

இந்த விடுதியானது சமீபத்தில் செவி கேளாத மற்றும் ஊமையான 7 விளையாட்டு வீராங்கனைகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதிக்கும் முன்னர் இந்த 7 பெண்களும் வேலையற்றவர்கள் மற்றும் வேலைக்காக தொடர்ந்து முயற்சி செய்தவர்களும் ஆவர்.

இந்த நிலையில் தேநீர் விடுதியின் தற்போதைய தலைமை ஒருங்கிணைப்பாளரான அவினாஷ் துக்கர் ஒருமுறை இதில் ஒரு விராங்கனையை சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடுதான் பின்னாளில் ஜாம்ஷெட்பூரில் அவர் துவங்கிய இந்த தேநீர் விடுதியில் விளையாட்டுத் துறையில் சாதித்தும் பின்னாளில் ரசிகர்களால் மறந்துபோன 7 சாம்பியன்களுக்கும் வாய்ப்பளிப்பது என்பது.

செவி கேட்காத மற்றும் வாய் பேச முடியாத இந்த எழுவரும் தற்போது இந்த தேநீர் விடுதியில் ஸ்டார்களாக வலம் வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான ஒரு சூழலையும் இவர்களது நேர்த்தியான அணுகுமுறை உருவாக்கியுள்ளதாகவும் அவினாஷ் பெரிதும் பாராட்டியுள்ளார்.

இதில் குருவீர் கவுர் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டனில் தங்கம் வென்றவர். சுக்கி என்பவர் பல முறை தடகள போட்டிகளில் சாதித்தவர் மட்டுமின்றி இதுவரை 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments