நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஏன்? சிக்கிய டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடிகை ராதா கடந்த மாதம் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் குன்றத்தூரை சேர்ந்த வைரம் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இதையடுத்து முனிவேலின் மனைவி உமாதேவி, ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டு தரும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை ராதாவை மிரட்டியது தனது கணவர் வைரம் கிடையாது என்று அவரது மனைவி லீனாவும் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து விருகம்பாக்கம் பொலிசார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முனிவேலுக்கு சொந்தமான காரை அடிக்கடி அந்தோணி பெனடிக்ராஜ் என்பவர் ஓட்டி வந்ததும், இதன் காரணமாக அவர் உமாதேவி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ‘நடிகை ராதாவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்து நான் தான்’என்று ஒப்புக்கொண்டார்.

அவர் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை ராதாவின் பிடியில் தனது முதலாளி முனிவேல் சிக்கி இருப்பதால் அவரது மனைவி உமாதேவி மிகுந்த வேதனை அடைந்தார்.

தனது கணவரை நடிகை ராதாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கதறி அழுத படி கூறினார். இதனால் ரவுடிபோல் பேசி மிரட்டினால் நடிகை பயந்து ஒதுங்கி விடுவார் என நினைத்து குன்றத்தூரை சேர்ந்த ரவுடி வைரத்தைபோல் பேசலாம் என்று முடிவு செய்து அவரை போல் பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தோணி பெனடிக்ராஜை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments