விஜய்யின் கில்லி பட பாணியில் பொலிஸை கொல்ல முயற்சி!

Report Print Basu in இந்தியா

தானேயில் கார் ஓட்டுநர் ஒருவர் விஜய்யின் கில்லி டப பானியில் பொலிசார் ஒருவரை காரில் தர, தரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி நரசிங் மகாபுரே, சம்பவத்தின் போது தானே எல்.பி.எஸ். சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் ஒருவர் தாறுமாறாக காரை ஓட்டிவந்துள்ளார். இதை கண்ட நரசிங் மகாபுரே, காரை நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் குடிபோதையில் இருந்த தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஓட்டுநரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 27 வயதான ஓட்டுநர் திடீரென பொலிஸ்காரர் நரசிங் மகாபுரேவை தாக்கியுள்ளார்.

மேலும், காரை ஓட்டியவாறு அவரது கையை பிடித்து கொண்டு சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு சிறிது இழுத்து சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காரை தடுத்து நிறுத்தி குடிபோதையில் இருந்த ஓட்டுநரை தர்மஅடி கொடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments