கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா

சினிமா பாடல்களில் ஆபாசமான, வன்முறையான வார்த்தைகள் இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதில், பொதுஇடத்தில் சிறுமி ஒருவரை கிண்டல் செய்ததாக தன் மீதான பொய்வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய அரசு தரப்பு வக்கீல், 16 வயது சிறுமி தனது தாயாருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பிரபுகுமார், கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என கேலி செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட இருவரை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என வாதிட்டார்.

ஆனால் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக பிரபுகுமார் சார்பில் வாதிடப்பட்டது.

இதுதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரபுகுமார் சினிமா பாடலை மட்டுமே பாடியுள்ளார், குறித்த சிறுமியை தொந்தரவு ஏதும் செய்யவில்லை, எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், மறு உத்தரவு வரும்வரை பொலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் திரைப்பட துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது, சினிமா பாடல்களில் ஆபாசமான, வன்முறையான வார்த்தைகள் இருக்ககூடாது, சினிமா மிகப்பெரிய ஊடகமாக உருவெடுத்துள்ள நிலையில் நல்ல விடயங்களை மட்டுமே போதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments