பெண்களுடன் உல்லாசமாக இருந்தது அமைச்சர் என உறுதி! வீடியோ ஆதாரம் வெளியானது!

Report Print Basu in இந்தியா

உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சியில் ஆதாரங்கள் சிக்கயதை தொடர்ந்து அமைச்சர் சந்தீப்குமாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லி அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் குழந்தைகள் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சந்தீப்குமார்.

சமீபத்தில் ஆபாச சிடி விவகாரத்தில் சிக்கினார், அவர் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஆபாச காட்சியில் இருப்பது தான் இல்லை என சந்தீப்குமார் சாதித்தார்.

இதையடுத்து, சந்தீப்குமார் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிரடியாக அறிவித்தது.

இந்நிலையில், வீடியோவை ஆய்வு செய்த பொலிசார் அதில் இருப்பது சந்தீப்குமார் தான் என்ற ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments