தும்மியதால் நுரையீரலுக்கு சென்ற மூக்குத்தி: பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Santhan in இந்தியா

விருதுநகரில் பெண் ஒருவரின் மூச்சுக் குழல் மற்றும் நுரையீரல் குழாய் பிரியும் இடத்தில் மூக்குத்தி திருகாணி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி(33). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தும்மும் போது, அவர் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி அவர் மூக்கின் உள்ளே சென்றுள்ளது.

இதை அவர் பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களாகவே தொடர் தும்மல் மற்றும் ஜலதோஷம் இருந்துள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனை சென்று, பரிசோதித்த போது அவரது மூச்சுக் குழல் மற்றும் நுரையீரல் குழாய் செல்லும் வழியில் மூக்குத்தி திருகாணி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் மருத்துவர்கள் உடனடியாக நுண்கருவிகளை கொண்டு அப்பெண்ணின் தொண்டை வழியே செலுத்தி திருகாணியை எடுத்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, திருகாணி நுரையீரலின் உள்ளே செல்லும்பட்சத்தில் உயிரைக் காப்பாற்றுவது கடினம். மூன்று மாதங்களான நிலையில் திருகாணி இந்த இடத்தில் இருந்தது ஆச்சர்யமானது என கூறினர். தற்போது பரமேஸ்வரி நல்ல நிலையில் உள்ளதாகவும் கூறினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments