சிகிச்சைக்கு வந்த பெண்ணை சிரிக்க வைத்து சாகடித்த மருத்துவர்கள்

Report Print Abhimanyu in இந்தியா

சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவருக்கு “ஆக்சிஜன் வாயு” அளிப்பதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு அளித்த காரணத்தால் குறித்த பெண் மரணமடைந்த வழக்கில், பெண்ணின் கணவருக்கு ரூ. 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ருக்மனி என்ற பெண் கடந்த 2011 மார்ச் 18ம் திகதி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது “ஆக்சிஜன் ” வாயு அளிப்பதற்கு பதிலாக, சிரிக்க வைக்கும் வாயு என அழைக்கப்படும் “நைட்ரஸ் ஆக்ஸைடு” வாயு தவறுதலாக அளிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சுயநினைவற்ற கோமா நிலையை அடைந்தார்.

இக்காரணத்தால் 2012 மார்ச் 4ம் திகதி ருக்மணி இறந்தார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ருக்மணியின் கணவர் கணேஷ் தனது மனைவியின் மரணத்திற்காகவும், இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ரூ. 50 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,

இந்த வழக்கு நான்கு வருடங்களாக இழுவையில் இருந்து வந்தது, தற்போது வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை பாதிக்கப்பட்ட ருக்மணியின் கணவர் கணேஷ்க்கு ரூ. 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments