ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சந்தீப்குமார் ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார். இவர் 2 பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த ஆபாச காட்சிகள் வெளியான சில மணிநேரத்தில், சந்தீப்குமாரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்தது.

ஆனால் இது கல்லூரியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று சந்தீப் குமார் விளக்கம் அளித்தார். பிறகு ஆபாச காட்சியில் இருப்பது தான் இல்லை என்றும் இது எதிர்க்கட்சிகள் மற்றும் தனக்கு வேண்டாதவர்களின் சதி எனவும் மழுப்பி வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தீப்குமார் மற்றும் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் பா.ஜ.க மற்றும் மற்ற அமைப்பினரால் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சந்தீப்குமார் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments