4 ஆண்டுகளில் ரோசய்யா செலவு செய்த அரசு பணம் எவ்வளவு தெரியுமா?

Report Print Basu in இந்தியா

தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா, சமீபத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெற்றார்.

இந்த 4 ஆண்டுகளில் அரசு பணத்தை அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கேட்டுப் பெற்றுள்ளார்.

அதன்படி, இந்த 4 ஆண்டுகளில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை பராமரிக்க ரூ. 1.27 கோடி ஆகியுள்ளது. ரூ.36.24 லட்சம் மின்சார செலவு ஆகியுள்ளது.

4 சொகுசு கார்கள், ஒரு மோட்டார் பைக் ஆகியவை சுமார் ஒரு கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. 36 லட்ச ரூபாய்க்கு தொலைபேசிக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆளுனரின் பயணச் செலவு ரூ.1.22 கோடி 470 முறை விமானத்தில் அவர் சென்றுள்ளார். 15 சதவீத அரசு விழாக்கள், 85 சதவீத தனியார் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments