பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த இந்தியன் பொலிஸ்!

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் ஸ்ரீநகரைச் சேர்ந்த இளம் பொலிசார் ஒருவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதில் பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல் நடந்து வரும் நிலையில், ஸ்ரீநகர் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஓவைஸ் கிலானி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத் நகரைச் சேர்ந்த பைசா கிலானியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணமக்கள் இருவருமே உறவினர்கள், ஆனால் ஒரு குடும்பம் காஷ்மீரிலும், மற்றொரு குடும்பம் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் வசித்து வந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் - முசாபராபாத் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து முசாபராபாத்தில் இருந்து மணமகளும் குடும்பத்தினரும் ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள ஹொட்டலில் நடந்த திருமணத்தில் மணமக்கள் குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் திட்டமிட்டபடி நடந்ததால் இரு குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments