200 பயணிகளுக்கு என்ன ஆனது? நடுவானில் நடந்த திக் திக் நிமிடங்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

டெல்லியில் இருந்து பாரிசுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 என்ற விமானம் 200 பயணிகளுடன் கடந்த மாதம் 28ம் திகதி புறப்பட்டது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி ஒருவர் திடீரென கோபப்பட்டதுடன், மிக உயரமாக விமானத்தை செலுத்தியுள்ளார்.

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த சக விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர்களின் துணையுடன் பெரும் ஆபத்தை தவிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? மனநலன் ரீதியாக ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என குறித்த விமானியை சோதித்து அறிந்து கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments