சுவாதி முதல் சோனாலி வரை! சமூகத்தில் நடக்கும் அவலங்கள்!

Report Print Maru Maru in இந்தியா

மாணவி, ஆசிரியை, வேலைக்குச் செல்பவர் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருதலைக் காதலால் பெண்களின் தலைகள் தொடர்ந்து உருளுகிறது.

நுங்கம்பாக்கம் சுவாதி, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? காதலை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம் தானே?

இவ்வாறான கொலைகளை தடுக்க என்ன தான் வழி அரசும் சமூக ஆர்வலர்களும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

ஒருதலை காதல் வருவது யதார்த்தம், அது இயற்கையின் சீர்கேடாகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக கொலை செய்யும் முடிவுகள் தனிமனித சீர்கேடு, அது அதிகரிப்பது ஒரு சமுதாயத்தின் சீர்கேடு.

பழங்காலத்தில் பெண்களை வெளியில் அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தது மூடநம்பிக்கையா அல்லது இதுபோன்ற காரணங்களுக்கான முன்னெச்சரிக்கையா என இப்போது எண்ணத் தோன்றுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments