பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி!

Report Print Basu in இந்தியா

சாராய வியாபாரத்தில் ஆரம்பித்து ஏழு கொலை வழக்குகள், எண்ணற்ற எதிரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தாதாவாக வளர்ந்த தனபாலன் ஸ்ரீதரின் ரூ.150 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தாதா ஸ்ரீதர் அல்லது தமிழ்நாட்டின் தாவூத் இப்ராஹிம் என்று பொலிஸ் அதிகாரிகளால் அழைக்கப்படும் தனபாலன் ஸ்ரீதர் தமிழக காவல்துறையால் அதிகம் தேடப்படும் நபர், இவரும் துபாயில்தான் பதுங்கியுள்ளார்.

துபாயில் பதுங்கியிருந்து கொண்டே தன்னுடைய ஆட்கள் மூலம் சென்னைக்கு அருகே ரூ. 500 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் ரவுடித்தனத்தை செயல்படுத்தி வருகிறார். பல வருடமாக தலைமறைவாகவும் இருக்கிறார்.

இந்நிலையில் தனபாலன் ஸ்ரீதரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கறுப்புண பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பல்வேறு நபர்களை மிரட்டி சொத்துக்களை அபகரித்தது உட்பட பல்வேறு வழக்குகள் ஸ்ரீதர் மீது உள்ள நிலையில் தற்போது அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மேலும் துபாயில் பதுங்கியுள்ள அவரை இந்தியா கொண்டு வரவும் பொலிசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments