சுவாதி கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு மறுப்பு

Report Print Aravinth in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயார் சார்பில் சிபிஜ விசாரணை கோரி தொடரப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து பல தகவல்களும், சந்தேகங்களும் வெளியாகி கொண்டிருந்த நிலையில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் என்பவர், சுவாதி கொலை வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை அங்கு இருந்தவர்கள் துரத்தியுள்ளனர். மேலும், அந்த கொலைகாரன் பயன்படுத்திய அரிவாளிலும் கைரேகை இல்லை எனவும், அந்த அரிவாள் கர்நாடக மாநிலத்தில் வாங்கப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டன.

இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் முதலில் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் பிலால் என்பவர் மீது சந்தேகித்து 4 நாட்கள் விசாரணை நடத்தினர். இதுவரை உண்மையான தகவல்களை வெளியிடாமல் வெறும் பொய்யான புலன் விசாரணை மட்டும் நடத்தி வருகின்றனர்.

எனவே, இந்த வழக்கில் உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க நுங்கம்பாக்கம் பொலிசாரிடமிருந்து சி.பி.ஐ விசரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், வழக்கு சரியான கோணத்தில் செல்வதாகவும், இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments