புது அவதாரம் எடுத்த ”சிக்ஸர்” சித்து

Report Print Arbin Arbin in இந்தியா

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.,யும் பிரபல கிரிக்கெட் வீரருமான சித்து தனது ஆதரவாளர்களுடன் தனி கட்சியை துவக்க உள்ளார்.

கடந்த சில மாதங்களாக சித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூடும் என தகவல்கள் பரவியது.

ஆனால் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், சித்து தமது கட்சியில் சேர இருப்பதை வரவேற்பதாகவும் அதே நேரத்தில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் எனவும் கூறினார்.

இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த சித்து தனி கட்சியை துவக்க முடிவு செய்துள்ளார்.

புதிய கட்சியை துவக்க உள்ள சித்து வரும் 9-ம் திகதி அதுகுறித்து முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும், பின்னாளில் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சித்துவின் மனைவி பஞ்சாப் மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments