மருத்துவர்கள் அஜாக்கிரதையால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Arbin Arbin in இந்தியா
மருத்துவர்கள் அஜாக்கிரதையால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
317Shares

கேரளாவில் துணி கிளிப் ஒன்றை பெண்ணில் வயிற்றில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் நெடுமங்காடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் லைலாபீவி(45) என்ற பெண்ணுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் மருத்துவ ஆய்வக உதவியாளர் அறுவைசிகிச்சை செய்த உபகரணங்களை சரி பார்க்கும் போது, துணி கிளிப் ஒன்று காணவில்லை என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் எக்ஸ்ரே வை பார்க்கையில், பெண்ணின் இடது வயிற்றில் கிளிப் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இதை அப்பெண்ணிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அப்பெண் திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அருகில் உள்ள தொலிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருந்தார்.

மருத்துவர்கள் பரிசோதனையின் போது வயிற்றில் கிளிப் இருப்பதை கண்டு, அதை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தனர்.

மேலும் லைலாபீவி நலமுடன் உள்ளதாகவும், எந்த ஒரு பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை அறிந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா இதற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments