காவலாளியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி வங்கியில் கொள்ளை முயற்சி!

Report Print Arbin Arbin in இந்தியா
57Shares

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில், சேவை நேரம் முடிந்தும் பணியாளர்கள் வங்கியின் உள்ளே இருந்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் வங்கிக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலாளி ராஜேந்திரன், அத்துமீறி நுழைய முயன்றவரை தடுத்துள்ளார்.

உடனே அந்த இளைஞர் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை காவலாளி முகத்தில் திடீரென்று தூவியதாக கூறப்படுகிறது. அப்போது ராஜேந்திரன் கூச்சலிட்டதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

இந்த கூச்சல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த கட்டட காவலாளி, இளைஞரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் மணிகண்ட பிரபு என்பதும், விருகம்பாக்கத்தில் தங்கி சினிமாவில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்ட பிரபுவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments