மக்களே நீங்க இவ்ளோ நல்லவங்களா? வாழ்த்துக்கள் “ஜோக்கர்”

Report Print Basu in இந்தியா
142Shares

ஜோக்கர் படத்தின் போஸ்டர் மூலமாக வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக சேர்ந்திருப்பதால் தயாரிப்பாளர் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஜோக்கர்'.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 'ஜோக்கர்' படத்தை திருட்டு விசிடி-யில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தும்படி வங்கி கணக்கைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினார்கள். அப்போஸ்டருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கில் பலரும் பணம் செலுத்தியுள்ளனர். தற்போது வரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கி கணக்கில் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் பிரபு கூறியுள்ளார்.

மேலும் அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் அனுப்பும் பணத்தை வைத்தே ஒரு கழிப்பறையை கட்டிவிடுவோம் என பிரபு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments