பேயை நேரில் பார்த்த நடிகர் சூரியின் உண்மையான அனுபவம்: திகில் கிளப்பும் வீடியோ..!

Report Print Basu in இந்தியா
1248Shares

நடிகர் சூரி பேயை நேரில் பார்த்த உண்மையான அனுபவத்தை அவரின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவில், நடிகர் சூரி படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் கோவை- பழனி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் நடுவில் யாரோ ஒருவர் நிற்பதை போன்று பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது ஓட்டுனரிடம் காரின் விளக்குகளை அணைத்து விட்டு காரை அந்த உருவத்தின் மீது மோதுமாறு கூறியுள்ளார்.

அவர் கூறிய படியே காரில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு பேய் போன்ற உருவத்தின் மீது காரை ஏற்ற முற்பட்டிருக்கிறார்கள்.

அப்போது காரை பலமாக தாக்குவது போன்ற சத்தம் மட்டும் கேட்கிறது. காரில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் என்ன நடந்தது என்று வீடியோவில் தெளிவாக தெரியவில்லை.

ஒரு நிமிடம் ஓடிக்கூடிய இந்த வீடியோ காட்சி, நடிகர் சூரியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments