தி.மு.க மற்றும் அ.தி.மு.க போட்டி போட்டுக்கொண்டு பகைமை வளர்க்கக்கூடாது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அ.தி.மு.க, தி.மு.க என இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு குற்றம் சாட்டி வருகின்றனர். எதிர்கட்சியான தி.மு.க சட்ட சபையில் அவ்வப்போது வெளிநடப்பு செய்து வருகின்றன.
இதன் காரணமாக தமிழக சட்ட சபையிலிருந்து தி.மு.க தொண்டர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் சட்டசபையில் அங்கிருந்த அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டார்.
காஞ்சிபுரம் வந்த வைகோ இது குறித்து கூறியதாவது, சட்ட சபையில் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை சபாநயகர் மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகரை ஒருமையில் பேசுவது ஏற்புடையதல்ல, அதற்காக அவர்கள் சபாநாயகரின் உருவபொம்மை எரிப்பது கண்டிக்கதக்கது. தி.மு.க உறுப்பினர்கள் போராட்டத்திற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்காதது வரவேற்கதக்கது.
மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க போட்டி போட்டுக்கொண்டு பகைமையை வளர்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.