நடிகையிடம் ரூ.6 லட்சம் அபேஸ்

Report Print Jubilee Jubilee in இந்தியா
243Shares

பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்ட் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நர்கிஸ் ஃபக்ரி மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நர்கிஸின் கிரெடிட் கார்டை யாரோ க்ளோன் செய்து அதன் மூலம் அமெரிக்காவில் ரூ. 6 லட்சம் பணம் எடுத்துள்ளனர். 4 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 14 முறை பண பரிவர்த்தனை நடந்துள்ளது.

இதனையறிந்த நர்கிஸ் கடந்த திங்கட்கிழமை இரவு இது குறித்து மும்பை ஜுஹு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments