சென்னைக்கு மீண்டும் ஆபத்து! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Report Print Jubilee Jubilee in இந்தியா
264Shares

மழைகாலம் விரைவில் வரவிருப்பதால் சென்னை மக்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்ததால் சென்னை தண்ணீரில் மூழ்கியது.

வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழை தான் வெள்ளத்திற்கு காரணம் என்றாலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாதது தான் முக்கிய காரணமாக அனைவராலும் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதும் சென்னை தண்ணீரில் தத்தளிக்க காரணமாகியிற்று.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments