நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்

Report Print Jubilee Jubilee in இந்தியா
1047Shares

நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் இணையத்தில் வெளியானது தொடர்பாக பார்ச்ட் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நடிகையான ராதிகா அப்தே சமீபத்தில் நடித்து வெளியான கபாலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் லீனா யாதவ் இயக்கிய பார்ச்ட் என்ற படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

இதில் ராதிகா ஆப்தே, ஹுசைன் இருவரும் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பரபரப்பாக பேசும் அளவிற்கு ஒன்றுமில்லை என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ராதிகா ஆப்தே, ஹுசைனின் படுக்கையறை காட்சி இணையத்தில் வெளியானது விளம்பரத்திற்காக செய்யப்பட்டது அல்ல. இது எங்களுக்கே தெரியாது.

இந்த படம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு இருப்பவர்கள் தான் அந்த காட்சியை இணையத்தில் கசியவிட்டிருக்க வேண்டும்.

இருப்பினும் அந்த நிர்வாண படுக்கையறை காட்சியில் என்ன தவறு இருக்கிறது. அதில் எந்த பரபரப்போ, உணர்ச்சியை தூண்டும் வகையிலோ எதுவும் இல்லை.

ராதிகா என் சகோதரி போன்றவர். அவரை நான் ஒருபோதும் தவறாக சித்தரிக்க மாட்டேன். இது அந்த காட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments