ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Report Print Basu in இந்தியா
ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
470Shares

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது.

ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார், இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி சேர்ந்த வழக்கறிஞர் லாவண்யா என்பவர், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளர்.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments