சர்வாதிகார செயலில் ஈடுபடும் சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்புவேன்: துரைமுருகன்

Report Print Aravinth in இந்தியா
27Shares

சர்வாதிகார செயலில் ஈடுபடுவதாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்று திமுக வின் மேடைப்பேச்சாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில்திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது, எதிர்கட்சித் தலைவர்அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சர்வாதிகாரசெயலைக் கண்டிக்கும் விதமாகவே தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். வெளிநடப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டு தான் திமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வரவில்லை என கூறிய ஸ்டாலின், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் தான் நாட்டு மக்கள் இதுகுறித்த உண்மையை தெரிந்து கொள்ள முடியும்என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்னர் துரைமுருகன்செய்தியாளர்களிடம் பேசிய போது, சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என சாடினார். எதுசட்டமன்றத்திற்குட்பட்ட பகுதி என்பது கூட அறியாதவராக சபாநாயகர் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் பணியை தடுத்ததாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments