நடிகர் மாதவன் மீதான வழக்கு! நீதிபதி அதிரடி உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா
1055Shares

பழநி பாலசமுத்திரத்தில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக4.88 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலம் ராஜவாய்க்காலின் ஒருபகுதியைஆக்கிரமித்து இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரியும் என்.கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிஉத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பழனி வட்டாசியர் தாக்கல்செய்த பதில் மனுவில், அரசுநிலத்தை மனுதாரர் மாதவன் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு இடையூறுசெய்யவில்லை.

வாய்க்காலில்சீராக தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் இடையூறு இல்லாமல் அவரதுசொந்த இடத்தில்தான் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள்நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர்அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குவந்தது.

பழனி வட்டாட்சியரின் பதில் மனுவை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை எனகூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments