இதுவும் பெண்ணா? ஆத்திரத்தில் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சைக்கோ தந்தை

Report Print Aravinth in இந்தியா
448Shares

கும்முடிப்பூண்டி அருகே தன் மனைவிக்கு தொடர்ச்சியாக மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்முடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சி அமிர்தமங்களத்தைச் சேர்ந்த தாமோதரன்– அம்பிகா தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்பிகா மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 3-வதும் பெண் குழந்தையாகி விட்டதே என்ற விரக்தியில் தன் மனைவியிடம் மிகவும் முரட்டுத்தனமாக தாமோதரன் நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே சம்பவ தினத்தன்று தாமோதரன் 3வது குழந்தையை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என அம்பிகாவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அம்பிகா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கழுத்தை நெறித்தும், சுவரில் தூக்கி அடித்தும், கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அம்பிகாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் கவரைப்பேட்டை பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments