பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியருக்கு அடி, உதை

Report Print Aravinth in இந்தியா
360Shares

பள்ளிக்கு தினமும் தாமதமாக வரும் ஆசிரியரை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சரமாரியாக அடித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வேல்முருகன் தினமும் பள்ளிக்கு கால தாமதமாக வருவதும், வகுப்பறையில் பாடம் சரியாக நடத்தாமல் பொழுதைக் கழித்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து பெற்றோர்கள் இந்த விவகாரம் குறித்து ஆசிரியரிடம் கேட்டபோது, நான் அப்படித்தான் தாமதமாக வருவேன்; என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் வேல்முருகனை சரமாரியாக அடித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆசிரியர் வேல்முருகன் புகார் செய்துள்ளதாகவும், பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments