மது அருந்திய 13 பேர் பரிதாபமாக பலி! பதற்றத்தில் அரசு

Report Print Basu in இந்தியா
95Shares

பீகாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சட்டமன்ற தேர்தலின் போது பீகாரில் மதுவிலக்கை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தார்.

தேர்தலில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த மார்ச் மாதம் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.

இந்நிலையில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதிக நச்சு தோய்ந்த மதுபானத்தை அருந்தியதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கிடைப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறியதாவது, அவர்கள் கடந்த சனிக்கிழமை உள்ளூரில் விற்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதாகவும், பின்னர் துக்கமின்மை, மூச்சுத்திணறல், வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்னர்.

செவ்வாய்க்கிழமை இரவு நிலைமை மேலும் மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் பொலிஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் நச்சு தோய்ந்த மதுபானம் அருந்தியே உயிரிழந்தாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments