நண்பரின் மகளை கொலை செய்த கொடூரன்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா
1786Shares

கேரளாவில் கர்ப்பமானது தெரியாமல் இருக்க கள்ளக்காதலியை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ஆரன்முளா பகுதியை சேர்ந்தவர்கள் விசுவாம்ரான், காதர் யூசப். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். விசுவாம்ரானுக்கு அசுவதி(20)என்ற மகள் இருந்துள்ளார்.

காதர்யூசப்பின் மனைவி அரபு நாட்டில் வேலை செய்து வந்துள்ளதால், அசுவதி அடிக்கடி காதர்யூசப் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது நாளையடைவில் கள்ளக்காதலாக மாறிய காரணத்தினால், அசுவதி கர்ப்பமானார். யூசப்பை திருமணம் செய்யவும் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அவரோ திருமணம் செய்ய மறுத்ததோடு மட்டுமில்லாமல், கருவை கலைக்க கூறியுள்ளார். அசுவதி கருவை கலைக்க மறுத்துள்ளார். இந்நிலையில் யூசப்பின் மனைவி வெளிநாட்டில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

தற்போது அசுவதியுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு தெரிந்தால், தம்மை கொலை கூட செய்து விடுவாள் என கருதி அசுவதியை கழுத்தை நெரித்து கொன்று, தனக்கு வந்த கொரியர் கவரில் வைத்து தோட்டத்தில் வீசியுள்ளார்.

அசுவதி பிணம் அழுகிய நிலையில் கிடந்தது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. பிணத்தை கொரியர் கவரில் வைத்து வீசியதால் அதில் யூசப் முகவரி இருந்துள்ளது, இதனால் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அசுவதியை கொலை செய்தது நான் தான் என ஒப்புக்கொண்டதால், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments