நான் கொல்லப்படலாம்! ஜெயலலிதா மீது சசிகலா பொலிசில் பரபரப்பு புகார்

Report Print Jubilee Jubilee in இந்தியா
713Shares

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை தாக்கிய விவாகரத்தில், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மீது டெல்லி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி சிவாவை பார்த்த சசிகலா புஷ்பா, திடீரென திருச்சி சிவாவின் அருகில் சென்று, அவரது சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கினார்.

இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலைய பொலிசாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவையும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா போயஸ் கார்டனில் சந்தித்தார்.

இதனையடுத்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் கதறி அழுது தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் டெல்லி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், என்னை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள். ஜெயலலிதா எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அப்படி ராஜினாமா செய்யாவிட்டால் கொல்லப்படுவதாக மிரட்டுகிறார்கள்.

எனக்கு உடனடியாக முழு பொலிஸ் பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. அதிமுக.,வினரால் நான் கொல்லப்படலாம் என அந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments