சுவாதி கொலை வழக்கு: பிலால் ரகசிய வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
586Shares

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இந்த கொலை தொடர்பாக ராம்குமார் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த குற்றத்தை ராம்குமார் செய்யவில்லை, சுவாதி பற்றிய விடயங்களை பொலிசார் திட்டமிட்டே மறைக்கின்றனர் என ராம்குமாரின் வழக்கறிஞர் கூறிவருகிறார்.

இந்நிலையில் சுவாதியின் நண்பரான பிலால் மாலிக் இன்று ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் சுவாதியின் தோழி உட்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர், இவர்கள் அனைவரும் சென்னை சைதாப்பேட்டையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் வீட்டில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சுவாதி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments