காதலிக்கு காதலன் செய்த துரோகம்! நண்பருடன் சேர்ந்து கற்பழித்த கொடுமை

Report Print Fathima Fathima in இந்தியா
1188Shares

ஒரிசா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் வைத்து தனது காதலியை கற்பழித்து கொன்ற காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரிசா மாநிலத்தில் கட்டாக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், சந்தோஷ் சாகு என்ற பேருந்து ஓட்டுநரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண் சந்தோஷ் சாகுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதை தொடர்ந்து, சந்தோஷ் சாகு குறித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய பேருந்தில் ஏற்றிக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் பெண் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் செய்துள்ளனர். தீவிரமாக தேடிய போது பெண் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், குறித்த பெண்ணின் காதலனாகிய சந்தோஷ் சாகு மற்றும் அவருடைய நண்பரும், பேருந்து நடத்துனருமாகிய பிபுதி ரவத்துடன் சேர்ந்து பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

இதனால், பொலிசார் ஓட்டுநர் மற்றூம் நடத்துனர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments