அதிகரிக்கும் பால் கலப்படம்! குழந்தைகளுக்கு பேராபத்து

Report Print Basu in இந்தியா
301Shares

இந்தியாவில் அதிகரித்து வரும் பால் கலப்படம் குறித்து கவலை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், இனி பாலில் கலப்படம் செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளது.

நாட்டில் பால் கலப்படம் அதிகரித்து வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்தாகூர் தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், நாட்டில் பால் கலப்படம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது கூறிய நீதிபதிகள், பால் கலப்படத்தை தடுக்க தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தண்டனை அளவை அதிகப்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டனர்.

உ.பி., வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கலப்பட குற்றங்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுபாடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பால் கலப்படம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், ஊழல் மற்றும் கலப்படங்களை தொடர் கண்காணிப்பின் மூலம் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments