அமீர்கானுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Basu in இந்தியா
அமீர்கானுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
211Shares

பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அமீர்கான் ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் இந்திய தேசிய சின்னத்தை பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக நடிகர் அமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பஞ்சாப்–அரியானா நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் மனுவை தள்ளுபடி செய்தது.

அந்த தொண்டு நிறுவனம் சார்பில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த சண்டிகரை சேர்ந்த ஹர்மன் எஸ்.சித்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் தேசிய சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக மனுதாரருக்கு ஏதேனும் தனிப்பட்ட கவலை இருந்தால், பொலிசாரை அணுகுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments