தேசிய கீதத்தை தவறாக பாடியதாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது டெல்லியில் உள்ள புதிய அசோக் நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா நேற்று இரவு தொடங்கியது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்த விழாவில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சன்னி லியோன் மீது தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறி புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள புதிய அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடியது குறிப்பிடத்தக்கது.