இதுவரை 35 பேரின் உயிரை குடித்த ஏ.என்.32 ரக விமானம்!

Report Print Arbin Arbin in இந்தியா
இதுவரை 35 பேரின் உயிரை குடித்த ஏ.என்.32 ரக விமானம்!
602Shares

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏ.என்.-32 ரக ராணுவ சரக்கு விமானம் இதுவரை 2 முறை விபத்துக்குள்ளாகி 35 பேரின் உயிரை குடித்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு கிளம்பிய விமானப்படை விமானம் ஏ.என்.-32 மாயமாகியுள்ளது.

விமானம் கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் விமானத்தை வங்கக் கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களிலேயே ஏ.என்.-32 ரக விமானம் தான் மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. தற்போது விமானப்படையில் சுமார் 100 ஏ.என்.-32 ரக விமானங்கள் உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து 125 ஏ.என்.-32 ரக விமானங்கள் வாங்கப்பட்டன. இரண்டு என்ஜின்கள் அடங்கிய இந்த ரக விமானம் மோசமான வானிலையிலும் தடுமாறாமல் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி அருணாச்சல பிரதேசத்தில் ஏ.என்.-32 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 13 பேரும் பலியாகினர். என்ஜின் கோளாறால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அருணாச்சல பிரதேச விபத்திற்கு முன்னதாக 1999ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி அருகே ஏ.என்.-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 22 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments