மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

Report Print Jubilee Jubilee in இந்தியா
80Shares

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவெற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த நீட்டிப்புக்கான பணிகளை நாளை நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரயில் பாதை முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கி.மீ தூரத்துக்கு முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அந்த பாதையில் மெட்ரோ ரெயில் ஓடியது. அதை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மேலும், மற்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணி மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர்/விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது.

இந்நிலையில் இந்த பணிகளை முதல்வர் ஜெயலலிதா நாளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்

மேலும், சென்னை தண்டையார்பேட்டை ஜெகஜீவன்ராம் விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுயும் கலந்து கொள்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments