மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்கள் திரும்பி வருவார்கள்; சச்சின் நம்பிக்கை

Report Print Kalam Kalam in இந்தியா
192Shares

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் திரும்பி வருமென நம்பிக்கை உள்ளது என பிரபல துடுப்பாட்ட நாயகன் சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமானுக்கு இன்று 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 விமானம் திடீரென்று மாயமானது.

உடனே இந்திய விமானப்படை விமானங்களும், கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக கடலோர காவல்படையின் கப்பல்களும் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.மீனவர்களிடமும் கடலில் எதாவது பொருள்கள் மிதந்தால் தெரிவிக்கும் படி கேட்டுகொள்ளப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “போர்ட்பிளேர் அருகே மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி திரும்பி வருவார்கள் என்று நம்புகின்றேன், கடவுளை இறைஞ்சுகிறேன்,” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments