கபாலி படம் இணையத்தில் வெளியானது

Report Print Fathima Fathima in இந்தியா
592Shares

கபாலி படம் இணையத்தில் வெளியானது குறித்து உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாணு-வின் வழக்கறிஞர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

ரஜினி நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் கபாலி. இந்த படத்தை இணையத்தில் திருட்டு தனமாக பதிவேற்றம் செய்வதை தடுக்க இந்தியாவில் 169 இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், கடந்த 15-ஆம் திகதி இந்தியாவில் 169 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு செய்தியாக ஊடகங்களின் மூலம் பரவிய நிலையில் திருட்டு தனமாக படங்களை வெளியிடும் கும்பல், கபாலி படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என சவால் விட்டிருந்தது.

இதன்படி, இன்று காலை 10 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாகவே ஒரு வலைதளத்தில் கபாலி படம் வெளியாகிவிட்டது.

இதை தொடர்ந்து, இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தரப்பு வழக்கறிஞர் குருமூர்த்தி கபாலி படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது குறித்து நீதிபதி கிருபாகரன் முன்பு முறையிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபாலி படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அந்த வலைதளம் பயன்படுத்திய நிறுவனம் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments