சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம்

Report Print Fathima Fathima in இந்தியா
சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம்
875Shares

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை 29 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 29 பேருடன் அந்தமான் புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து தொடர்பு அற்று போனதால் அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணி துரிதமாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பதாக தெரிகிறது.

விமானம் எங்கே சென்றது, விபத்தில் ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments