சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு செல்வது வழக்கம்.
மக்களும் புதிய மீன்கள் கிடைக்கும் என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று மீன்பிடிப்பதற்காக ஆழ்கடல் சென்று திரும்பிய பொழுது மீனவர்களின் வலையில் சுமார் 2 கிலோ மதிக்கதக்க கண்ணாடி பாறை மீன்கள் அதிகமாக சிக்கியிருந்தன. இவை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.