பெற்ற மகளையே பணம் கொடுத்து கொன்ற தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா
784Shares

தமிழகத்தின் நாமக்கல் அருகே பெற்ற மகளையே ரூ.1,00,000 கொடுத்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் வேலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வம்-சுமதி தம்பதியினரின் மகள் காவ்யா.

கருத்து வேறுபாடு காரணமாக செல்வம்- சுமதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், காவ்யா கடந்த 15-ஆம் திகதி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் தந்தை செல்வத்தையும், அத்தை வெண்ணிலா மற்றும் சங்கர் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து, குடும்ப பிரச்சனை காரணமாக செல்வம் தான் ரூ 1 லட்சம் வழங்கி காவ்யாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments