8 பேரை ஏமாற்றி கல்யாணம் செய்த மோசடி மன்னன் சிக்குவாரா?

Report Print Fathima Fathima in இந்தியா
8 பேரை ஏமாற்றி கல்யாணம் செய்த மோசடி மன்னன் சிக்குவாரா?
395Shares

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மதுரை சேர்ந்தவர் சலாமியா பானு, இவர் நேற்று மதுரை மாவட்ட பொலிஸ் கமிஷனரை சைலேஷ்குமார் யாதவை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.

அதில், எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர், தன்னுடைய உறவினர் காதர் பாட்சா வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனவும் கூறினார்.

எனது பெற்றோருடன் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார், காதர் பாட்ஷாவுக்கும், எனக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இருவரும் எனது அப்பா வீட்டில் வசித்து வந்தோம், இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் ஏன் என்று கேட்டேன்.

அவர் சரிவர பதில் கூறவில்லை, இந்நிலையில் கடந்த 2ம் திகதி வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்த மூன்று லட்சம் பணம், 8 பவுன் நடிகை மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

திரும்பி வராத காரணத்தினால் அவரை பற்றி விசாரித்தோம், அப்போது தான் சென்னை, திண்டுக்கல், வத்தலக்குண்டு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், 8வதாக என்னை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரியவந்தது.

எனவே அவர் மீதும், எனக்கு அறிமுகம் செய்த தஸ்லிமா மற்றும் அவர் கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments