சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்திற்கான டிக்கெட்டிற்காக சிபாரிசு கடிதம் அனுப்பிய உதவியாளரை பணிநீக்கம் செய்வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. அதாங்க உதவியாளர் டிக்கெட் கேட்டு அபிராமி திரையரங்குக்கு சிபாரிசு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய சிபாரிசு கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தலைமைச் செயலகம்,
சென்னை
தேதி: 15.7.2016 வி.
பிரேம்குமார்
செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் மூத்த உதவியாளர்
பெறுநர், மேனேஜர்,
அபிராமி தியேட்டர்,
சென்னை- 7
ஐயா, இந்த கடிதத்தை கொண்டு வரும் திரு ரிஸ்வான் அவர்களுக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான 10 டிக்கெட்டுகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் வாட்ஸ் அப்பில், வைரலாகியுள்ளது, இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை கூறியதாவது, தனக்கு தகவல் அளிக்காமல், உதவியாளர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவரை பதவி நீக்கம் செய்ய கோரி பணியாளர் நலத்துறைக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறியுள்ளார்.