இது வெட்கக்கேடு...வெத்து வேட்டு பட்ஜெட்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Report Print Deepthi Deepthi in இந்தியா
இது வெட்கக்கேடு...வெத்து வேட்டு பட்ஜெட்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
126Shares

தமிழக அரசு பட்ஜெட் வெறும் வெத்து வேட்டு அறிவிப்பாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் போன்றோருக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறதாதது வேதனைக்குரியதாக உள்ளது.

2011 அ.தி.மு.க அரசு பட்ஜெட்டில், சமூக விரோதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுத்து அமைதி பூங்காவாக தமிழகத்தை நிலைநாட்டுவோம் என அறிவித்தனர்.

ஆனால், தற்போது தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, செயின் பறிப்பு அதிகரித்துள்ளது. முதல் பட்ஜெட்டில், '22,800 கோடி ரூபாயில், 3,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், நான்கு திட்டங்களை துவக்குவோம்' என அறிவித்தனர். இதுகுறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல, '1.20 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை, ஐந்து ஆண்டுகளில் உருவாக்குவோம்' என 2011ல் கூறினர். தற்போது இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து, 2.52 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது என நிதியமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதை விட வெட்கக்கேடு வேறு இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வெறும் வெத்து வேட்டு அறிவிப்பாக வந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments