2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார்.
கனிவு தந்த உடையாக
இரக்கத்தின் திருமகளாக
ஈகைக்கே இலக்கணமாக
மக்களுக்காகவே உதிக்கின்ற மாசறு இதயமாக
மானிட உடையில் வாழுகிற மனித தெய்வமே
மாதவத்தில் வாழுகின்ற தயாகத்தின் சொரூபமே
புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில்
6ம் முறையாக தமது ஆற்றல் கரங்களில் அரசாட்சி செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் அம்மா என்னும் சிங்கமே
புத்தனைப் போல் பொறுமை காத்து
10 கோடி தமிழர்களின் இதயத்தில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் எங்கள் அம்மாவே
வெற்றிகளுக்கே விலாசமாகிய வீரத்திருமகளே
திருப்புமுனை உருவாக்கிய சரித்திர புத்தகமே சாதனை பெட்டகமே
என்னை நம்பி பல பொறுப்புகள் தந்துள்ள அம்மாவுக்கு
எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்று கவிதை பாடினார்.
இந்த கவிதைக்கு வரிக்கு வரி கைதட்டி தமிழக அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.