19வயது பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: குற்றவாளியை அடித்தே கொன்ற மக்கள்

Report Print Basu in இந்தியா
19வயது பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: குற்றவாளியை அடித்தே கொன்ற மக்கள்
2910Shares

ஆந்திர மாநிலத்தில் 19வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற இரண்டு பேரை, பொது மக்கள் கட்டி வைத்து அடித்ததில் ஒருவன் உயிரிழந்தன். மேலும் ஒருவன் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குண்டூர் மாவட்டத்தை அடுத்த தவுலாதேவி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜாஸ்மின். அவர் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீசாய் மற்றும் ஜென்னா பவன்குமார் என்ற இரண்டு பேர் ஜாஸ்மினை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர்.

பின்னர், கழுத்தில் பெல்டை மாட்டி பேனில் தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளனர்.

ஜாஸ்மின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளனர்.

ஆனால், கிராமத்தினர், ஜாஸ்மின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அந்த இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து கிராம மக்கள் பொலிசாருக்கு அளித்த தகவலை தொடர்ந்து, குற்றவாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்தவமனையில் ஸ்ரீசாய் என்ற நபர் உயிரிழந்துள்ளார். பவன்குமார் கவலைக்கிடமாக உள்ளார் எனவும், சம்பவம் குறித்து மேல்விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments